அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், யோகி பாபு என்று பல்வேறு தரப்பினர் நடித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ள இந்த திரைப்படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், ப்ரீ புக்கிங்கில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை உலக அளவில், 9.5 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.