அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்பது குறித்து, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் படங்களிலேயே, இதுதான் குறைவான ரன்னிங் டைம் கொண்ட படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.