மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தின் வெற்றியின் மூலம், அஜித் பட வாய்ப்பை பெற்ற இவர், குட் பேட் அக்லி என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் குழு, ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நாட்டில் மட்டும் 50 நாட்கள் ஷூட்டிங் நடத்த உள்ளார்களாம். நாளை முதல், அங்கு ஆக்ஷன் காட்சிகளை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.