அஜித் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படம், வரும் 6-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான், இந்த படத்தையும் இயக்க உள்ளார். இந்நிலையில், குட் பேட் அக்லியின் டீசர் ரிலீஸ் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, இப்படத்தின் டீசரை, வரும் மார்ச் 6-ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், டீசரை எதிர்நோக்கி காத்துக்கிடக்கின்றனர்.