ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. வரும் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் மீது, ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த டிரைலர், Youtube பக்கத்தில் மிகவிரைவிலேயே 1 கோடி பார்வையாளர்களை கடந்து, சாதனை படைத்துள்ளது. இதனை அறிந்த அஜித்தின் ரசிகர்கள், இந்த சாதனையை பகிர்ந்து வருகின்றனர்.