அஜித், த்ரிஷா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் HD தரத்தில், வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இந்த படம் HD தரத்தில், ஆன்லைனில் வெளியாகி இருப்பது, படக்குழுவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.