அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், நேற்று முன்தினம் வெளியானது.
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் செய்துள்ள சாதனை குறித்து தெரியவந்துள்ளது.
அதாவது, 24 மணி நேரத்தில், எக்ஸ் பக்கத்தில் மட்டும், 62 மில்லியனுக்கும் அதிகமானோர், இந்த போஸ்டரை பார்த்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், Thank You மாமே என்று படக்குழுவினர் பதிவு வெளியிட்டுள்ளனர்.