41 தொழிலாளர்களை மீட்பது குறித்த நல்ல செய்தி வரும்: உத்தரகண்ட் முதல்வர்!

உத்தரகண்ட் சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பது குறித்த நல்ல செய்தி வரும் என்று முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பது குறித்த நல்ல செய்தி வரும். தொழிலாளர்களை மீட்க இடுபாடுகளின் பக்கவாட்டில் 52 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

இன்னும் சில மீட்டர்கள் மட்டுமே துளையிட வேண்டியுள்ளது. அதற்கு பிறகு குழாய் அனுப்பப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்படவுள்ளனர்” என்று முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News