கூகுள் அசிஸ்டன்டிற்கு பதிலாக தமிழ் மொழியில் கூகுளின் AI செயலி

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான ‘ஜெமினி’ தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக, 1,500 பக்க ஆவணங்கள், 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரம் பெற முடியும். ஆண்ட்ராய்ட் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து இதனை பயன்படுத்தலாம்.

ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கும் ஜெமினி மொபைல் செயலியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்துகிறோம். இந்த உள்ளூர் மொழிகளை ஜெமினி அட்வான்ஸ்டு மற்றும் பிற புதிய அம்சங்களையும் சேர்த்து, ஆங்கிலத்தில் Google Messages-ல் Gemini-ஐ அறிமுகப்படுத்துகிறோம் என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News