தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவர் கவுண்டமணி. இவர் நடிப்பில் உருவான பல்வேறு காமெடி காட்சிகள், இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது சில படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.
இவருக்கு சுமித்ரா என்ற மகள் உள்ளார். இவர் அவ்வப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவிகளை செய்து வருகிறாராம்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், கவுண்டமணியின் மகளை பாராட்டி வருகின்றனர்.
