Connect with us

Raj News Tamil

கமல் படத்தில் இணைந்த வாரிசு நடிகர்!

சினிமா

கமல் படத்தில் இணைந்த வாரிசு நடிகர்!

நாயகன் படத்திற்கு பிறகு, கமல்- மணிரத்னம் ஆகியோரின் கூட்டணி, தக் லைஃப் படத்தில், மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள ரசிகர்கள், படம் தொடர்பான எந்த அப்டேட் வெளியானாலும், ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் வாரிசு நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More in சினிமா

To Top