போர்க்களமாக மாறிய என்.எல்.சி போராட்டம்…கடலூரில் அரசு பேருந்து சேவை நிறுத்தம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

பாமகவினர் கல் வீசி தாக்கியதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்போது கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News