வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கனமழை எதிரொலியாக அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள், 4 மணிக்கே வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலக பணியாளர்களுக்கு, தமிழக அரசு முன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.