கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் சிறுபான்மையர் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1943 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடம் 2015ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது.
இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் அந்த பள்ளியில் கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் இல்லாமல் உள்ளது.

இப்பள்ளியின் மேற்க்கூறை மோசமான நிலையில் உள்ளது. இதனால் அரசு பள்ளியின் மேற்கூரையை பிளாஸ்டிக் காகிதம் போட்டு மூடக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளியை சுற்றிலும் முட்புதர்கள் உள்ளதால ஜன்னல் வழியாக பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் உள்ளே வருகின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன்ட வகுப்பறையில் அமர்ந்துள்ளனர்.
தனியாக இடம் ஒதுக்கி புதிய பள்ளி கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.