போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு இ சல்லான் முறையில் அபராதம் வசூலிக்கும் திட்டம் கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக அமலில் இருந்து வருகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் அரசு வாகனம் ஒன்று 2 மாதங்களில் அனைத்து விதிகளையும் மீறியுள்ளது.
கர்நாடக காவல்துறையால் தொடங்கப்பட்ட இ-சலான் இணையதளத்தின் தரவுகளின்படி, இந்த வாகனம் பல முறை விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த வாகனத்திற்கு அபராதத் தொகையாக ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனத்திற்கு அபாரதம் விதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.