ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி எச்சரிக்கை விடுத்த கி,வீரமணி..!

சென்னை பனகல் மாளிகையில் ஆன்லைன் சூதாட்டதிற்கு, ஆளுநர் அனுமதி அளிக்காததை கடித்து, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர், திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடாது என்ற குறிக்கோளுடன் ஆளுநர் செயல்பட்டு வருகிறார், மேலும் அரசியல்வாதி போல் செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார்.

அப்போது அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஆளுநர், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதியை ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.