அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களுக்கும் மாற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக முதல்வர் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அரசியல் சாசன சட்டத்தை மீறி செயல்படும் தி.மு.க அரசு மீது 355வது சட்டப்பிரிவ பயன்படுத்தி தமிழக சட்டசபையை முடக்கும்படி மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊழல் செய்து சட்டவிரோத பண பறிமாற்றத்தில் ஈடுபட்டுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அரசுக்கு தெரிவித்தும், முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடு, அரசியல் சாசன அமைப்பையே சீர்குலைக்கும் முயற்சியில் அனைத்து அரசு எந்திரங்களையும் முடுக்கிவிட்டுள்ளதாக தனது பரிந்துரை கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.
ஆளுநர் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று டெல்லி உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இரவு 12 மணிக்கு எதுவும் நடக்கலாம் என கூறப்படுகிறது.