ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் மசோதாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 19ம் தேதி 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 4 மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

RELATED ARTICLES

Recent News