திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
இதனையடுத்து மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அம்மன் சன்னதிக்கு சென்று மீனாட்சி அம்மனையும், சுவாமி சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தார்.
45 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுசென்றார்.
இந்நிலையில் , நாளை நடக்கவிருக்கும் மனோன்மனிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக மதுரை விமானநிலையம் வந்து சென்னை செல்வார் என்று தகவல் வெளிவந்துள்ளது.