சட்டப்பேரவையில் தமிழக அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உறையாற்றிய போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.
இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு முதல் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.
சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் வருகை தந்தார். ஆளுநர் வருகைக்கு தமிழக சட்டப்பேவைத் தலைவர் அப்பாவு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கிய ஆளுநர், அனைவருக்கும் வணக்கும் எனத் தமிழில் கூறி, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், உரை தொடங்குவதற்கு முன்பும் தேசிய கீதம் இசைக்க வேண்டும். என பலமுறை நான் கோரிக்கை வைத்தும் அறிவுறுதியும் வந்துள்ளேன். ஆனால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
அரசின் இந்த உரையில் பல பகுதிகள் தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனை நான் படிப்பது அரசியல் அமைப்பு சட்டத்தை மீரிய செயலாகும். எனவே இந்த அவையின் மாண்பை கருதி நான் எனது உரையை முடித்து கொள்கிறேன்.
மேலும் இந்த அவையில் தமிழ்நாடு மக்களின் நலனிற்காக ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.