சென்னை ஊழல் வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணை வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் விளக்கம்:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் விளக்கம் “முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளது” “முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக அரசிடம் இருந்து எந்தவித ஆவணங்களும் வரவில்லை” “முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும்” “முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை தமிழக அரசு அளிக்காததால் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது”- ஆளுநர்