சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறையை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கி முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்து உள்ளார். அதை திருப்பி அனுப்பியதுடன் ஆளுநர் விமர்சனம் செய்து உள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் படி இயங்க கூடிய பொறுப்பில் இருக்க கூடியவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டரை போல் திரும்ப திரும்ப செய்து வருகிறார். அவரது அணுகுமுறை அதிர்ச்சி அளிக்கிறது.
ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் போல் இயங்கி கொண்டு இருக்கிறது. சனாதன சக்திகள், சங்பரிவார் அமைப்புகள் குவியும் இடமாக ஆளுநர் மாளிகையை மாற்றி இருக்கிறார். இந்த போக்கு ஆபத்தானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்துகிறேன்.
பா.ஜ.க.ஆளாத மாநிலங்களில் நெருக்கடி தருவதை இந்திய ஒன்றிய அரசு வாடிக்கையாக கொண்டு உள்ளது. முதல்வருக்கு நெருக்கடி தரும் பா.ஜ.க.அரசின் சதியை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிப்போம் என திருமாவளவன் கூறியுள்ளார்.