வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
பந்தய நிறுவனங்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளப்படும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசு அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
மேலும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை மட்டும் ஒழுங்குபடுத்துங்கள் மற்றும் மற்ற விளையாட்டுகளை விட்டுவிடுங்கள் எனவும் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.