உலகக் கோப்பையின் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவு பெற்ற நிலையில், புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகள் அரையிறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
முதல் அரையிறுதி போட்டி இன்று, வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியாவும், நியூசிலாந்து அணியும், மோதி வருகின்றன.
இந்நிலையில், இந்த போட்டியின் தமிழ் கமெண்ட்ரியின்போது, ஆர்.ஜே.பாலாஜி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருடன் இயக்குநர் கௌதம் மேனனும் இணைந்துக் கொண்டார்.
இதற்கிடையே, ஆர்.ஜே.பாலாஜி கேட்ட கேள்வி ஒன்றிற்கு, அடுத்ததாக கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.
இது, இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் கிரிக்கெட் விளையாட செல்லும் கதையாக உருவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.