Connect with us

Raj News Tamil

ஓடிடியில் சாதனை பெரும் மாமன்னன்! திரையரங்கு வசூலை முறியடிக்குமா!

சினிமா

ஓடிடியில் சாதனை பெரும் மாமன்னன்! திரையரங்கு வசூலை முறியடிக்குமா!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர்
பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் பன்மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்தை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top