க்ரீன் பவர் ரேஞ்சர் தற்கொலை! 90-ஸ் கிட்ஸ் சோகம்!

90-ஸ் கிட்ஸ்களின் நினைவுகளில் மறையாத நிகழ்ச்சி என்றால், அது பவர் ரேஞ்சர்ஸ் தான். மாலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, காலை பள்ளி சென்றவுடன், நண்பர்களுடன் அதுபற்றி பேசாத ஆட்களே இருக்க மாட்டார்கள்.

இவ்வாரு இருக்க, பவர் ரேஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சியில், க்ரீன் ரேஞ்சராக நடித்த ஜேசன் டேவிட் ஃபிராங், நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தற்கொலை என்று கூறப்படுகிறது. ஆனால், அதுதொடர்பான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தைனோ தண்டர் நிகழ்ச்சியில் ப்ளாக் ரேஞ்சராகவும், மற்றொரு நிகழ்ச்சியில் White ரேஞ்சராகவும், ஜேசன் டேவிட் ஃபிராங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.