அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் – மேயர் பிரியா.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். கிண்டி ஆளுநர் மாளிகையில் ரகசிய காப்பு பதவிப் பிராமாணம் செய்து கொண்ட இவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இவருக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மேயர் பிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அமைதியாய் இருந்தாலும்…! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்…! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! என்று பதிவிட்டுள்ளார்.