”வாரிசு” படத்திற்கு பெருகும் ஆதரவு..!

விஜயின் வாரிசு தெலுங்கில் வெளியிட தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்துள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுகுறித்து பேசிய இயக்குனர் சுசீந்திரன் தெலுங்கில் வெளியான பாகுபலி, ஆர்,ஆர்,ஆர் போன்ற படங்கள் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.
மேலும் சினிமாவை மொழியாக பார்க்காமல் கலையாக பார்க்க வேண்டும் என்றார். மேலும் விரைவில் இப்பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.