தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்

இந்தியாவை சேர்ந்த வினோத் குமார் சவுத்ரி (வயது 44) என்பவர் ஆங்கில எழுத்துகளை கணினியில் தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இவர் முதன்முறையாக 2023-ம் ஆண்டில் 27.80 வினாடிகளில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அதே ஆண்டில், 2-வது முறையாக முயற்சித்து, 26.73 வினாடிகளில் டைப்பிங் செய்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், 3-வது முறையாக இவற்றை விட குறைந்த நேரம் எடுத்து கொண்டு, 25.66 வினாடிகளில் டைப்பிங் செய்து, மீண்டும் தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.

இந்த சாதனை படைத்தது பற்றி அவர் கூறும்போது, இதற்காக மணிக்கணக்கில் பயிற்சி செய்து இருக்கிறேன். ஆனால், மூக்கை கொண்டு டைப்பிங் செய்ய பயிற்சி மேற்கொள்ளும்போது, சில சமயங்களில் மயக்கம் வந்து விடும். எனினும், போதிய பயிற்சி பெற்றால் எல்லா விசயமும் சாத்தியப்படும் என உறுதிப்பட கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News