உடம்பா இல்ல ரப்பர் பேன்டா..! இணையத்தை தெறிக்கவிடும் சிறுவன்..!

36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 29-ஆம் தேதி குஜராத்தில் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போட்டியில்,ஷவுர்யஜித் என்ற 10-வயது சிறுவன்,மல்லர் கம்பம் விளையாட்டில் கலந்து கொண்டு விளையாடினார்.

இவர் மல்லர் கம்பம் என்னும் வழுக்கும் மரத்தில்,சட்டையின்றி உடலை நெலித்து வளைத்து,தலை கீழாக சாகசம் செய்யும் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரை பணயம் வைத்து, சாகசம் செய்யும் அச்சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.