குஜராத் கேம் ஷோன் தீ விபத்து.. முக்கிய குற்றவாளி கைது..

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள Game Zone-ல், கடந்த சனிக்கிழமை அன்று, மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது, யுவராஜ்சிங் சோலன்கி, நிதின் ஜெயின் மற்றும் ராகுல் ரதோட் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கடந்த திங்கள் அன்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, 2 வாரங்களுக்கு அவர்கள் நீதிமன்றக் காவலில் இருக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, தொடர்ந்து விசாரணை நடத்தியதில், “Game Zone-ஐ உரிமம் இல்லாமலே அவர்கள் நடத்தி வந்ததும், பாதுகாப்பு சான்றிதழ் கூட இல்லாமல் தான் இருந்துள்ளனர். மேலும், தீ விபத்தை தடுப்பதற்கான முறையான உபகரணங்கள் கூட அவர்களிடம் இல்லை. அவசரகாலத்தில் தப்பிக்கும் வழியை மட்டும் தான் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது, தவல் தாக்கல் என்பவர் தான், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இவர் ராஜஸ்தானில் உள்ள தனது உறவினர் வீட்டில் தான், இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தார். ஆனால், காவல்துறையினர் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து, கைது செய்தனர்.

RELATED ARTICLES

Recent News