ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? குஜராத், இமாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

குஜராத்

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

tamil news latest

இமாச்சலபிரதேசம்

இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கியுள்ளது. ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.