“உண்மைய சொல்லு..” பேருந்தில் மனைவியை கொன்ற காவலர்..! காரணம் என்ன?

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அம்ருத் ரத்வா என்பவர், காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மங்குபென் என்பவர், போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அம்ருத், தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனைவியை கொல்ல திட்டம் தீட்டிய அவர், மங்குபென் நடத்துநராக பணியாற்றும், பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

நடத்துநர் சீட்டில் அவர் அமர்ந்திருந்தபோது, அருகில் சென்ற அம்ருத், மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து, சரிமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், அந்த பெண்ணின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்த அம்ருத்தை, போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.