Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

சினிமாவில் அறிமுகமாகும் குஜராத் டைட்டன்ஸின் அதிரடி பேட்ஸ்மேன்! யார் தெரியுமா?

சினிமா

சினிமாவில் அறிமுகமாகும் குஜராத் டைட்டன்ஸின் அதிரடி பேட்ஸ்மேன்! யார் தெரியுமா?

2023-ஆம் ஆண்டின் ஐ.பி.எல் தொடரில், அனைத்து அணிகளுக்கும், சிம்ம சொப்பனமாக இருந்த அணி தான் குஜராத். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சுப்மன் கில்-ன் அதிரடியான பேட்டிங் தான்.

இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தாலே, அந்த மேட்சில், குஜராத் வெற்றி பெற்றுவிடும் அளவிற்கு, அருமையாக விளையாடி வந்தார். இந்நிலையில், இவர் சினிமாவில் நடிக்க இருப்பதாக, அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சுப்மன் கில், “என்னிடம் உள்ள நடிப்பு திறனை வெளிப்படுத்த நினைக்கிறேன். ஆனால் நான் திரைப்படங்களில் நடிக்கலாம், நடிக்காமலும் போகலாம்.

திறன் குறித்து பேசுவதற்குக் காரணம் நான் நடிப்பு பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். நான் வாழ்க்கையின் ஒரு பகுதியில் இதைச் செய்ய நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top