குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் தொழுகையில் இருந்த ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மாணவர்களில் லேப்டாப், வாகனங்கள் உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தியுள்ளனர். .
விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல், தடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி விடுதியின் பாதுகாவலரையும் தாக்கிவிட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.