“இனிமே வருஷத்துக்கு ஒருவாட்டி தான்” – ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி முடிவு..

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இந்த படத்திற்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், டார்லிங் படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானார்.

இதையடுத்து, நடிப்பு, இசை அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும், ஒரே சமயத்தில் மேற்கொண்டு வந்தார். இசையில் கொடிக் கட்டி பறந்து வந்த அவர், இரண்டு பணிகளை ஒரே சமயத்தில் மேற்கொண்டபோது, இரண்டிலும் சரிவர பணியாற்ற முடியவில்லை.

இவ்வாறு இருக்க, தற்போது அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார். அதாவது, இனிமேல் வருடத்திற்கு ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, மற்ற அனைத்து நேரங்களிலும், இசையமைப்பாளராக கவனம் செலுத்த உள்ளாராம். இது, ஜி.வி.பிரகாஷின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News