தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக அசத்தி வருபவர் கெளதம் மேனன். காதல் மற்றும் ரொமாண்டிக் படங்கள் இயக்கிய இவர், பெரும்பாலும் நெகடிவ் வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது லியோ படத்தில் நடித்து வரும் கெளதம் மேனன், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு சிம்புவின் பத்து தல படக்குழு, மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனால் இந்த படத்தில் ஜிவிஎம் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை வைத்து பார்க்கும்போது சிம்புவிற்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.