Connect with us

Raj News Tamil

தமிழக முதல்வரை ‘இந்து விரோதி’ என விமர்சித்த எச் ராஜா..நடவடிக்கை பாயுமா??

அரசியல்

தமிழக முதல்வரை ‘இந்து விரோதி’ என விமர்சித்த எச் ராஜா..நடவடிக்கை பாயுமா??

இயேசு கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னை பெரம்பூரில் உள்ள டாஸ் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரான ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஒரு சிலர் அரசியல் ஆதாயத்திற்காக நம்முடைய ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார்கள் என்றும் மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது என்றும் மறைமுகமாக பாஜகவை விமர்சித்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், இதை சொல்வது யார்? தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத இந்து விரோதி என முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்வரை இந்து விரோதி என எச் ராஜா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in அரசியல்

To Top