அஜித் கேட்டதை தர மறுத்த எச்.வினோத்!

துணிவு படத்தின் புரோமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, எச்.வினோத்தும், பிரபல ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ள அவர், சுவாரசியமான தகவல் ஒன்றையும் வழங்கியுள்ளார். அதாவது, துணிவு படத்தின் முழு கதையையும், அஜித் கேட்கவில்லையாம். ஒரே ஒரு காட்சியை எச்.வினோத் சொன்ன பிறகு, படத்திற்கே, அஜித் OK சொல்லிவிட்டாராம்.

ஆனால், இதில் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால், அந்த காட்சி படத்தில் இருந்து தூக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள், அப்செட்டாகி உள்ளனர்.