டாட்டா காட்டிய பிரபல நடிகர் – எச்.வினோத்துக்கு சிக்கல்!

கடந்த தீபாவளி பண்டிகை அன்றே வெளியாக வேண்டிய துணிவு திரைப்படம், சில பிரச்சனைகளின் காரணமாக, அன்று வெளியாக முடியாமல் போனது. தற்போது, பொங்கல் பண்டிகை அன்று வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால், படத்தின் ஷீட்டிங் இன்னும் நடைபெற்று வருவதால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல்வேறு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை, எச்.வினோத் இழந்து வருகிறார்.

அதன் ஒரு படியாக, நடிகர் விஜய்சேதுபதி படத்தை எச்.வினோத் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வினோத்திற்காக ஒதுக்கப்பட்ட கால்ஷீட்டை வேறொரு இயக்குநருக்கு விஜய்சேதுபதி வழங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.