ஆச்சரியப்பட வைத்த எச்.வினோத்தின் முடிவு! இவர் தான் ஹீரோவா?

வித்தியாசமான கதைக்களங்களின் மூலமாக, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர் இயக்குநர் எச்.வினோத். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது, துணிவு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிகர் யோகிபாபுவை ஹீரோவாக வைத்து, புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளாராம்.

சின்ன சின்ன திருட்டு செய்யும் அப்பாவி திருடன் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்க உள்ளாராம். பல்வேறு முன்னணி நடிகர்களை இயக்கிய எச்.வினோத், இவ்வாறு முடிவு செய்திருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.