Connect with us

Raj News Tamil

எச்.வினோத்தின் அடுத்த படம்..! செம மாஸ் தகவல்!

சினிமா

எச்.வினோத்தின் அடுத்த படம்..! செம மாஸ் தகவல்!

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, எச்.வினோத் யாருடன் கூட்டணி வைப்பார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த படம் தொடர்பான தகவலை எச்.வினோத் கூறியுள்ளார். அதில், “சதுரங்க வேட்டை மாதிரியான படம் ஒன்றை இயக்க உள்ளேன். இந்த படத்தில் தான் தனுஷ் நடிக்க உள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top