அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த எச்.வினோத்!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம், துணிவு. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்து, இயக்குநர் எச்.வினோத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்த திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி செட் போடப்பட்டதால், பலரும் அவ்வாறு நினைக்கின்றனர். ஆனால், அது அனைத்தும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல், ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அப்படி என்றால், வேறு எது கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.