முதற்கட்ட படப்பிடிப்பு.. விஜயின் பாராட்டை பெற்ற எச்.வினோத்..

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. கே.வி.என்.புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், பாடல் காட்சியை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். 10 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்த பாடல் காட்சி, வெறும் 9 நாட்களிலேயே முடிக்கப்பட்டுள்ளது.

விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில், ஒரு நாள் முன்னதாக படப்பிடிப்பை முடித்தாலே, மிகப்பெரிய தொகை சேமிக்கப்படும்.

இதன்காரணமாக, சரியாக திட்டமிட்டு, படப்பிடிப்பை விரைவிலேயே நடத்திய இயக்குநர் எச்.வினோத்துக்கு, நடிகர் விஜயும், தயாரிப்பாளரும், பாராட்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News