கனடாவைச் சேர்ந்த அன்யா எட்டிங்கர் கனடாவின் டோரண்டோவில் வசிக்கிறார். சமூக ஊடக தளமான Facebook Marketplace ல் இதனை அவர் பகிர்ந்துள்ளார். தான் ஒரு ‘படுக்கைத் துணையை’ தேடுவதாக அதில் அவா் தொிவித்துள்ளாா் . அதில் அவா் குறிப்பிட்டுள்ளதவாது தன் படுக்கையில் பாதியை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.மேலும் குறிப்பாக சில நிபந்தனைகளை விதித்துள்ளாா்,
அவரது பாதி படுக்கையை வாடகைக்கு எடுப்பவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தன்னுடன் வாழ வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளார். டோரண்டோ மிகவும் விலையுயர்ந்த நகரம். இங்கு அறை வாடகை மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் சாதாரண மக்கள் இந்த வாடகையை கொடுக்க சிரமப்படுகிறார்கள். அதனாலதான் ஒரு பெட் மேட்டை தேடுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் படுக்கைக்கான வாடகை மாதம் 900 கனேடிய டாலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.2.14 லட்சம்) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவாின் இத்தகைய சாமத்திய சம்பத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளாா். தனது பாதி படுக்கையை வாடகைக்கு விடும் பெண்ணின் செயல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.