Connect with us

Raj News Tamil

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அரை நிர்வாணமாக சாலையில் தூக்கி வீசிய கொடூரம்..

இந்தியா

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அரை நிர்வாணமாக சாலையில் தூக்கி வீசிய கொடூரம்..

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, நடுரோட்டில் அரை நிர்வாணமாக வீசி சென்ற சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜின் பகுதியில், 12 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாணமாக கிடந்துள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அதன்பிறகு, அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அந்த 12 வயது சிறுமி, அரை நிர்வாணமாக இருப்பதும், அவர் அங்கிருந்து இளைஞர் ஒருவருடன் உதவி கேட்பதும், அதற்கு அந்த இளைஞர், அந்த சிறுமியை அங்கிருந்து துரத்துவதும், பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in இந்தியா

To Top