இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான மோதல் என்பது, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த மோதலின் விளைவாக, ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்பு உருவாகி, இஸ்ரேலியர்களுடன் சண்டையிட்டு வருகிறது.
இவ்வாறு இருக்க, கடந்த ஒரு வருடங்களாக, இஸ்ரேல் நாட்டிற்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, தீவிரமாக போர் நடந்து வருகிறது. இந்த போரில், இரண்டு தரப்பிலும் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியுள்ளது.
இதன்காரணமாக, ஹமாஸ்-ம், இஸ்ரேலும், தங்களது பணயக் கைதிகளை விடுதலை செய்து வருகின்றனர். அதன்படி, தங்களது வசம் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் 6 பேரை, இன்று ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய உள்ளனர். அதற்கு ஈடாக, 602 பாலஸ்தீனிய கைதிகளை, இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ளது.