கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: இபிஎஸ் கண்டனம்!

அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் மகன் முகம்மது மகிர் தலையில் நீர் கோர்த்தல் பிரச்னை இருத்தால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வலது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் கை கருப்பாக மாறி அழுகியதால் அதனை மருத்துவர்கள் அகற்றினர். இதற்கிடையே தவறான சிகிச்சை அளித்து மகனின் கையை அகற்றிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் தாயார் புகார் அளித்திருந்தார்.

இதன்பின்னர் குழந்தை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்ததது.

இந்த விவகாரம் குறித்து எடப்பாடி கே.பழனிசாமி ட்விட்டரில் நேற்று வெளியிட்டப் பதிவு:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திமுக அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த துயர நிகழ்வு கண்டனத்துக்குரியது.

மேலும், குழந்தையை இழந்து வாடும் குடும்பத்துக்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும்.

மக்களை காக்கும் கடமையில் இருந்து திமுக அரசு ஒவ்வொரு நாளும் தவறுவதை இது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நிரூபணம் செய்கின்றன எனத் தெரிவித்துள்ளார் அவா்.

RELATED ARTICLES

Recent News