திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர் ராஜா. மாற்றுத்திறனாளியான இவருக்கு உதவி செய்வதற்காக, 16 வயது சிறுமி, அவரது வீட்டிற்கு செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அன்று, வழக்கம் போல், அந்த சிறுமி, ராஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய ராஜா, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சிறுமி கத்தி கூச்சலிட்டதையடுத்து, ராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ராஜாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ராஜாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 4 லட்சம் நிதியுதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ராஜாவை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.