இரண்டாம் தாரமாக வாக்கப்படும் ஹன்சிகா! அதிர்ச்சி தகவல்!

விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், சமீபத்தில் மஹா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி எதுவும் பெறவில்லை.

இதனால், சினிமாவிற்கு முழுக்க போட நினைத்த அவர், சுகேல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், ஹன்சிகாவின் திருமணம் குறித்து, அதிர்ச்சி தகவல் ஒன்று பரவி வருகிறது.

அதன்படி, சுகேல், ஹன்சிகாவின் தோழியுடைய கணவராம். இவர்கள் இருவருக்கும் விவாகரத்தாகியுள்ளதால், ஹன்சிகா அவரை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறாராம். இதுதொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.